மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். இவர்களுக்காக தடபுடலாக விருந்து சாப்பாடு தயாரிக்கப்பட்டு வருவதாக மாநாட்டிற்கு முதல் நாள் ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டது. பிரியாணி பரிமாறப்படும் என்று நினைத்து வந்தவர்களுக்கு புளியோதரை பரிமாறப்பட்டதை அடுத்து வந்திருந்த தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. அதேவேளையில், கொடுக்கப்பட்ட புளியோதரையும் மாநாட்டுக்கு பலமணி நேரம் முன்னதாகவே தயாரிக்கப்பட்டதால் சுவையும் தரமும் இல்லாத உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடியதாக இருந்ததாக கூறி அதை […]
