20 லட்சம் மோசடி: யோகிபாபு மீது போலீசில் புகார்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. அவர் நடிக்காத சினிமா இல்லை என்கிற அளவிற்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் யோகி பாபு மீது தயாரிப்பாளர் ஒருவர் 20 லட்சம் பணமோசடி புகார் ஒன்றை போலீசில் கொடுத்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு: சென்னை வளசரவாக்கம், பழனியப்பா நகரை சேர்ந்த ஆசீர் என்பவர் நேற்று விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் யோகி பாபு மீது புகார் மனு அளித்தார். அதில் அவர் “நான் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். 'ஜாக் டேனியல்' என்ற படத்தில் நடிப்பதற்காக நடிகர் யோகி பாபுவுக்கு 65 லட்சம் சம்பளமாக பேசி அதில் முன்பணமாக 20 லட்சம் கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட யோகி பாபு படத்தில் நடிக்க வராமலும், பணத்தை திரும்ப தராமலும் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.