Rajinikanth:எனக்கு இலவச டிவி கிடையாதானு கேட்ட ரஜினி: வீட்டிற்கே அனுப்பி வைத்த…

பல ஆண்டுகளுக்கு முன்பு இலவசமாக டிவி வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது ஏ.வி.எம். நிறுவனம். அந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் சிறப்பு விருந்தினர்.

ஜெயிலர் – முதல்வர்கள் கொண்டாடும் வெற்றி- வசூல் ராஜாவான ரஜினி
நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு ரஜினி கையால் இலவசமாக டிவி வழங்க வைத்திருக்கிறார்கள். ரஜினியும் அனைவருக்கும் டிவி வழங்கியிருக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

டிவியை கொடுத்து முடித்த பிறகு தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணனை பார்த்து எல்லோருக்கும் டிவி கொடுத்தீங்க சார், எனக்கு ஒரு டிவி கொடுக்கக் கூடாதா என்று பாவம் போன்று கேட்டாராம்.

ரஜினி இப்படி கேட்பார் என ஏ.வி.எம். சரவணன் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்திருக்கிறார்.

விழா முடிந்து ரஜினி தன் வீட்டிற்கு கிளம்பிவிட்டார். அவர் வீடு திரும்பிய சிறிது நேரத்தில், சரவணன் சார் இந்த டிவியை கொடுக்கச் சொன்னார்கள் என அழகான டிவியை வந்து கொடுத்திருக்கிறார்கள்.

அதை பார்த்த லதாவோ உடனே போனை எடுத்து சரவணனுடன் பேசியிருக்கிறார். அவர் ஏதோ விளையாட்டாக டிவி கேட்க நீங்கள் அதை போய் சீரியஸாக எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்திருக்கிறீர்களே என்று கூறியிருக்கிறார்.

அதை கேட்ட ரஜினியோ, லதாவிடம் இருந்து போனை வாங்கி, நான் சீரியஸாகத் தான் சார் உங்களிடம் கேட்டேன். அப்பா இன்னொரு டிவி வேணும்னு பிள்ளைங்க கேட்டாங்க. வாங்கலாம் என்று சொல்லி வைத்தேன். இந்த நேரத்தில் நீங்கள் அனைவருக்கும் டிவி கொடுக்கவே சரி, உங்களிடம் முதலில் கேட்கலாம் என கேட்டேன். நீங்களும் டிவியை அனுப்பி வைத்திருக்கிறீர்கள். எனக்கு புது டிவி வாங்கும் செலவு மிச்சம் என்று கூறியிருக்கிறார்.

ஏ.வி.எம். சரவணனிடம் கேட்டு டிவி வாங்கிய விஷயத்தை ரஜினி தான் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். பெரிய ஸ்டாராக இருந்தாலும் எளிமையாக இருக்கிறார், மனதில் பட்டதை பேசுகிறார். அதனால் தான் அவர் என்றுமே சூப்பர் ஸ்டார் என்கிறார்கள் ரசிகர்கள்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்த ஜெயிலர் படம் உலக அளவில் ரூ. 500 கோடி வசூல் செய்திருக்கிறது. வசூலில் தினமும் புது சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது ஜெயிலர்.

இந்நிலையில் உத்தர பிரதேசத்துக்கு சென்ற ரஜினிகாந்த் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்றார். தன்னை விட 21 வயது சிறியவரின் காலில் ரஜினி ஏன் விழுந்தார் என சமூக வலைதளங்களில் அவரை விளாசுகிறார்கள்.

யோகியின் வயதை அல்ல அவர் துறவி என்பதால் மரியாதை நிமித்தமாக காலில் விழுந்தார் ரஜினி. மற்றபடி எந்த காரணமும் இல்லை என்று ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ஏன் கால்ல விழுற, அறிவில்ல, அடிமைத்தனத்தை ஏன் தொடர்ந்து செய்ற?: பா. ரஞ்சித்தின் வைரல் வீடியோ

இந்நிலையில் பெற்றவர்களை தவிர வேறு யார் காலிலும் விழக் கூடாது என்று இயக்குநர் பா. ரஞ்சித் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் சிலரோ ரஜினியின் ட்விட்டர் ஹேண்டிலை கோர்த்துவிட்டிருக்கிறார்கள்.

ரசிகர்களை தன் காலில் விழக் கூடாது என்று சொன்ன ரஜினிகாந்த் இன்று ஒரு முதல்வரின் காலில் விழுந்துவிட்டார் என விமர்சிக்கிறார்கள்.

Vidaa Muyarchi: அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தை கைவிட்ட லைகா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.