ஹூஸ்டன் : வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், இந்தியரை சுட்டுக்கொலை செய்த மர்மநபர்கள், அவரிடம் இருந்து எட்டு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
மெக்சிகோ நாட்டில் உள்ள மெக்சிகோ நகரில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வந்த இரண்டு இந்தியர்கள், 19ம் தேதி காரில் சென்றனர். அவர்களிடம் எட்டு லட்சம் ரூபாய் இருந்தது.
அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு மர்ம நபர்கள், பணத்துடன் வந்த இந்தியர்களின் காரை வழிமறித்தனர். கார் நிறுத்தப்படாததால், மர்ம நபர்கள், காரை ஓட்டி வந்த இந்தியரை சுட்டுக்கொலை செய்தனர். இதில், காரில் இருந்த மற்றொரு இந்தியரும் காயம் அடைந்தார். இதையடுத்து காரில் இருந்த எட்டு லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
கொலை, கொள்ளை சம்பவம் பற்றி அறிந்த மெக்சிகோவில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், குற்றவாளிகளை விரைவில் பிடிக்க வேண்டும் என, மெக்சிகோ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement