இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்பிரகாஷ், சூரி, உள்ளிட்ட பலரது நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ‘நான் மகான் அல்ல’.
இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்கள் பலரும் படம் தொடர்பாக பல்வேறு பதிவினை வெளியிட்டிருந்தனர். அதில் ஒரு பகிர்வை பகிர்ந்த நடிகர் விஷ்ணு விஷால் ‘நான் மகன் அல்ல’ படம் எனக்கு இரண்டாவது படமாக அமைய வேண்டிய படம் என்று பதிவை ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படம் எனக்கு இரண்டாவது படமாக அமைய வேண்டியது. வெண்ணிலா கபடி குழுவுக்குப் பிறகு சுசீந்திரன் சாருடன் இப்படத்தின் மூலம் இணைந்திருக்க வேண்டியது.
One of my favourite…
I was supposed to do this as my second film with suseenthiran sir after vennila kabadi kuzhu …
It was almost finalised but then fate had other plans..Sometimes i think ‘ wat if ‘ this was my second film..
But then its not ‘what if’..
Its ‘what is’:) https://t.co/35j4FgkSdA— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) August 21, 2023
எல்லாம் இறுதியான நிலையில் ஒரு சில காரணங்களால் முடியாமல் போய்விட்டது. ‘நான் மகான் அல்ல’ மட்டும் என் இரண்டாவது படமாக அமைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என சில சமயங்களில் நினைத்து பார்ப்பேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.