வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜோகன்னஸ்பர்க்: பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பை விரிவுபடுத்த இந்தியா ஆதரவளிக்கிறது என தென்ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின், 15வது உச்சி மாநாடு, ஆப்ரிக்க நாடான தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று (ஆக.,22) துவங்கியது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு மாநாட்டில் பங்கேற்ற நாட்டு தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்தார்.
பின்னர், பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை சேர்க்க பிரிக்ஸ் நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பை விரிவுபடுத்த இந்தியா ஆதரவளிக்கிறது. ஒரெ பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்பதை அடிப்படையாக கொண்டு இந்தியா முன்னேறி வருகிறது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் தலைவரான பிரிக்ஸ் அமைப்பில், உலக தெற்கில் உள்ள நாடுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஜி 20 தலைவர் பதவியில் இந்தியாவும், இந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.

உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகவே உள்ளது. விரைவில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும். சாலையோர வியாபாரிகள் முதல் ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தற்போது உலகிலேயே இந்தியாவில் அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement