மகளிர் உரிமைத் தொகை: இறுதியாகும் பட்டியல் – கடைசி நேரத்தில் ஆலோசனை கேட்கும் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை பதிவு செய்யும் இரண்டு கட்ட முகாம்கள், சிறப்பு முகாம் ஆகியவை நடந்து முடிந்துள்ள நிலையில் ஆவணங்கள் சரி பார்ப்பு, கள ஆய்வு, ஆகியவை நடந்து முடிந்த பின்னர் தகுதியானவர்கள் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். ஆவணங்கள் சரிபார்ப்பின் போது சந்தேகத்துக்கு உரிய விண்ணப்பங்களில் மட்டும் வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

தமிழ்நாடு அரசுக்கு நிதி நெருக்கடி!தமிழ்நாடு அரசு பல்வேறு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போதும் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் இந்தத் திட்டத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் போது குடும்பச் செலவுகளுக்கு ஆக்கப்பூர்வமாக செலவழிக்கப்படும் இதனால் தனிநபரோ, அந்த குடும்பமோ மட்டும் பயனடையப் போவதில்லை. தமிழகப் பொருளாதாரமும் அடுத்தகட்டத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச பொருளாதார வல்லுநர் குழு!2021 தேர்தல் அறிக்கையியே திமுக இந்த வாக்குறுதியை அளித்திருந்தாலும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு பொருளாதார வல்லுநர்களிடம் இது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. சர்வதேச பொருளாதார நிபுணர்களான ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ழான் த்ரேஸ், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.நாராயணன் ஆகியோரிடம் தமிழக அரசு அவ்வப்போது ஆலோசனைகளைப் பெற்று வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை – ஆலோசனை!தேவையின் நிமித்தம் அவ்வப்போது இந்த குழு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரிடம் பேசி வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது எப்படி என்பது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நேற்றுமுன் தினம் இந்தக் குழுவுடன் மீண்டும் ஆலோசனை நடத்திய ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்தும் பேசியுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை – ஏன் இந்த திட்டம்?Universal Basic Income கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சுயமரியாதையோடு வாழ வழி செய்யும் என்று ஸ்டாலின் கூறினார். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொருளாதாரக் குழுவின் ஆலோசனை வேண்டும் என்று கூறினார். பொருளாதார நிபுணர்களும் தங்கள் ஆலோசனைகளை இது தொடர்பாக வழங்கியுள்ளனர்.
நிபுணர்களின் ஆலோசனையுடன் மெருகேறும் திட்டம்!​​
செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ள இந்த திட்டம் எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். எனவே கள யதார்த்தத்தையும், நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை போக்கை கவனித்து அது தொடர்பாக உத்தரவுகளை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.