மாணவியை வீடியோ கா​லில் நிர்வாணமாக பேச வைத்து பணம் பறிக்க முயற்சி ​- இளைஞர் சிக்கியது எப்படி?!

திருவள்ளூர் மாவட்டம் மேல அய்யம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ்குமார் (23). இளங்கலை பட்டதாரியான இவர், தற்போது ​தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் படித்து கொண்டு அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். 

ஆபாச படங்கள்

இந்நிலையில் சமூக வலைதளமான டெலிகிராம்-ல் உள்ள ஒரு குழுவில் இணைந்த இவர், ​அக்குழுவில் இருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவியிடம் பழகி வந்​துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த மாணவியின் ​இன்ஸ்டாகிராமில் உள்ள புகைப்படங்களை வைத்து​ மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக ​மிரட்டி அவரை வீடியோ காலில் ​ஆடையின்றி பேச ​வைத்துள்ளார். 

இ​தையடுத்து மாணவியின் புகைப்படத்தை வைத்து போலி இன்ஸ்டா பக்கத்தை உருவாக்கி, அந்த மாணவியின் தம்பியை தொடர்பு கொண்டுள்ளார். மாணவி வீடியோ காலில் பேசியதை பதிவு செய்​து அதனை ​மாணவியின் தம்பிக்கு அனுப்பி ​உள்ளார்.​ ​இந்த வீடியோ ​சமூக வலைதளங்களில் பரவாமல் அழிக்க தனக்கு 2​ லட்ச ரூபாய் தர வேண்டும் எனக் கேட்டு​ மிரட்டிள்ளார்.​

கைது

இதனால் பாதிக்கப்பட்ட ​மாணவி அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த தேனி சைபர் கிரைம் போலீ​ஸார் யோகேஷ்குமாரை​கைது செய்​தனர். அவரிடம் செல்போனை ஆய்வு செய்தபோது, ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ​

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.