ஸ்டாலினுக்கு டெல்லி வைக்கும் செக்: தனி மரமாக்க பிளான் – நான்கு மாதத்தில் பெரிய மாற்றம்!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை அமைக்க பல்வேறு கட்சிகள் முயன்று வரும் நிலையில் திமுக அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் திமுகவுக்கு எதிராக மத்திய அரசின் ஏஜென்சிகள் குறிவைத்து செயலாற்றுவதாக திமுக வட்டாரத்தில் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிர்ச்சியில் திமுக அமைச்சர்கள்திமுக அமைச்சர்களின் பழைய வழக்குகளை அமலாக்கத்துறை தூசி தட்டி வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றமும் அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகிறது. பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் அவரை வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. ஆனால் அந்த வழக்கை தானாகவே முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்திருந்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை Vs அமலாக்கத்துறைஇதேபோல் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாததால் நீதிமன்றம் இரு அமைச்சர்களையும் வழக்குகளிலிருந்து விடுவித்திருந்தது. ஆனால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கையும் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
ஸ்டாலினுக்கு நெருக்கமான அமைச்சர்!தேர்தல் நெருங்கும் சமயத்தில் அடுத்தடுத்து அமைச்சர்களின் வழக்குகள் சூடு பிடிக்கும் நிலையில் அரசியல் களத்திலும் அனல் தெறிக்கிறது. கேகேஎஸ்எஸ்ஆர் திமுகவின் சீனியர் அமைச்சர். தங்கம் தென்னரசு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவராகவும் அறியப்படுகிறார். நிதித்துறையை அமைச்சராக உள்ள அவரிடம் தான் ஸ்டாலின் தற்போது முக்கிய விவகாரங்களில் ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜிக்கு அடுத்து யார்?​​
ஏற்கனெவே ஸ்டாலினின் உத்தரவுகளை, விருப்பங்களை கொங்கு மண்டலத்தில் நடத்தி காட்டி அந்த பகுதியில் கட்சிக்கு புத்துயிர் அளித்து வந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் வளைக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் தங்கம் தென்னரசுவின் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது, ஸ்டாலினுக்கு வைக்கப்படும் ‘செக்’காவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் திமுகவை குறிவைத்து பல சம்பவங்களை டெல்லி நிகழ்த்த உள்ளதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.