ஒன்னுல்ல, இரண்டுல்ல, 35 தேசிய விருதுகள் வென்றவர் இந்த சகலகலா வல்லவர்

ஆகஸ்ட் 24ம் தேதி மாலை 5.30 மணிக்கு 69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்திருக்கிறது.

அஜித், கலைஞரை எதிர்த்து பேசவே இல்லை? – கோடாங்கி ஆபிரகாம்
இந்நிலையில் சினிமா வரலாற்றிலேயே அதிக தேசிய விருதுகள் வென்றவர் யார் என்பதை பார்ப்போம்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மறைந்த இயக்குநர் சத்யஜித் ரே தான் அதிகமான தேசிய விருதுகள் வென்றவர். 35 தேசிய விருதுகளை வென்ற திறமைசாலி அவர்.

சத்யஜித் ரே இயக்கிய முதல் படமான Pather Panchaliக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது. அது வெறும் துவக்கம் தான். அடுத்து அவர் திரையுலகில் இருந்தவரை அவ்வப்போது தேசிய விருதுகள் வென்றார்.

1994ம் ஆண்டு வெளியான உத்தோரன் படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார் சத்யஜித் ரே. அது தான் அவர் வாங்கிய கடைசி தேசிய விருது ஆகும்.

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 6 முறை பெற்றார் சத்யஜித் ரே. அவர் இயக்கிய 9 பெங்காலி படங்கள் சிறந்த பெங்காலி படத்திற்கான தேசிய விருது வென்றன. மேலும் சிறந்த ஃபீச்சர் படம் பிரிவிலும் ஆறு தேசிய விருதுகள் வென்றிருக்கிறார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

1974ம் ஆண்டு வெளியான சத்யஜித் ரேயின் சோனார் கெல்லா படத்திற்கு மட்டும் ஆறு தேசிய விருதுகள் கிடைத்தது. அந்த படத்திற்காக சத்யஜித் ரேவுக்கு மட்டும் சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த பெங்காலி படம் ஆகிய பிரிவுகளில் விருது கிடைத்தது.

சிறந்த குழந்தைகள் படம், சிறந்த ஆவண படத்திற்காகவும் தேசிய விருது பெற்றிருக்கிறார் சத்யஜித் ரே.

அவரை அடுத்து அதிக தேசிய விருதுகள் வென்றவர் அடூர் கோபாலகிருஷ்ணன். அவருக்கு 17 தேசிய விருதுகள் கிடைத்தது.

நான்கு முறை சிறந்த இயக்குநருக்கான விருது வென்றார். சினிமா பற்றிய சிறந்த புத்தகம் பிரிவிலும் தேசிய விருது வென்றவர் அடூர் கோபாலகிருஷ்ணன்.

அடூர் கோபாலகிருஷ்ணனை அடுத்து பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி அதிகபட்சமாக 5 தேசிய விருதுகள் வென்றார். பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோர் தலா 4 முறை தேசிய விருது வென்றிருக்கிறார்கள்.

தேசிய விருதுகள் பாரபட்சமானது: சரியாக சொன்னார் ஏ.ஆர். முருகதாஸ் என பாராட்டும் ரசிகாஸ்

ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற தனுஷுக்கு இம்முறை கர்ணனுக்காக விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி எதுவும் கிடைக்காமல் போகவே அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் சூரரைப் போற்று படத்தை அடுத்து ஜெய்பீமுக்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால் அவருக்கும் கிடைக்கவில்லை. பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரைக்காக ஆர்யாவுக்கு ஒரு தேசிய விருது கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.