காவிரியில் கர்நாடகா திறந்துவிட்ட தண்ணீர் எவ்வளவு? மேலாண்மை ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம், கர்நாடகா இடையில் சட்டப் போராட்டம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் விவசாயம் வறட்சியை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் உரிய நீரை திறந்துவிடவில்லை என்று தமிழக அரசு முறையிட்டது. அதற்கு, பருவமழை ஏமாற்றி வருகிறது. எனவே போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் திறந்துவிட முடியவில்லை என்று கர்நாடகா அரசு விளக்கம் அளித்திருந்தது. உச்ச நீதிமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையில்,

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது முறையாக விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்

தமிழக அரசு வாதம்

வறட்சி சூழலை சந்தித்து வருவதால் போதிய நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். இதற்கான உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்திற்கு 15 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை அம்மாநில அரசு சரியாக செய்திருக்கிறதா? அடுத்த 15 நாட்களுக்கு தேவையான தண்ணீர் காவிரியில் இருக்கிறதா?

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

பிரமாண பத்திரம் தாக்கல்

காவிரி ஆணைய உத்தரவை கர்நாடகா அரசு முழுமையாக செயல்படுத்தி உள்ளதா? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் மூலம் தண்ணீர் திறப்பில் புதிதாக எதுவும் அறிவுறுத்தப்படவில்லை என்று தெரிகிறது. தற்போதைய நிலையே தொடரும் எனத் தெரிய வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணைய அறிக்கை விவரங்கள்

நடப்பு தென்மேற்கு பருவமழை காலம் பற்றாக்குறை மழையை அளித்திருக்கிறதா? மழைப்பொழிவு குறைந்துள்ளதா? ஒருவேளை அப்படி இருந்தால் எப்படி சரிசெய்வது? தமிழகத்திற்கு இதுவரை கர்நாடகா அளித்த காவிரி நீரின் அளவு என்ன? கர்நாடகா பயன்படுத்த நீரின் அளவு எவ்வளவு?

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட வாத, பிரதிவாதங்கள் என்ன? இரு மாநிலங்களும் முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன? தற்போதைய மழை பற்றாக்குறையை சமாளிக்க ஏதேனும் சிறப்பு திட்டங்கள் இருக்கிறதா? போன்ற விவரங்களை அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.