வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கார்கில்: சீன விவகாரத்தில் மத்திய அரசு பொய் சொல்கிறது என காங்., எம்.பி., ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். கார்கில் மற்றும் லடாக் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் அங்கு நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு அவர் கூறினார்.
ராகுல் மேலும் கூறியதாவது:
இந்திய – சீன எல்லையில் வாழும் மக்கள் பலரை சந்தித்துபேசினேன். இரு நாடுகளுக்கு உள்ள எல்லை விவகாரம் குறித்து பிரதமர் மோடியும், மத்திய அரசும் பொய் சொல்கிறது. ஒரு அங்குல இடத்தை கூட சீனாவிடம் இழக்கவில்லை என்கிறது. ஆனால் அங்கு வாழும் மக்களிடம் விசாரித்தால் கிராசிங் என்ற பகுதியில் நாம் அனைவரும் பயன்படுத்தி வந்தோம். இப்போது அங்கு செல்ல முடியாது என மக்கள் சொல்கின்றனர்.
பா.ஜ.,வும், ஆர்எஸ்எஸ்சும் நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது. ஆனால் காங்கிரஸ் அமைதியையும், மனிதநேயத்தையும் நாடு முழுவதும் பரப்புகிறோம். பா.ஜ.,வின் வன்முறை அரசியலுக்கு எதிராக நிற்கிறோம் என்பதை காட்டவே பாரத் ஜூடோ யாத்திரை ஒற்றுமைக்கான அடையாளமாக நடத்தினோம்.
பனிக்காலம் என்பதால் யாத்திரையின்போது இங்கு வரமுடியவில்லை. இதனால் நான் தற்போது லடாக் மக்களை பார்க்க மோட்டார் பைக்கில் வந்தேன். லடாக் மக்கள் உரிமைக்கு எப்போதும் துணைநிற்போம். இவ்வாறு ராகுல் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement