
பிறந்தநாளில் தொண்டர்களை சந்தித்த நடிகர் விஜயகாந்த்
சென்னை : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இன்று(ஆக.,25) 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி, ம.நீ.ம., கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உடல்நிலை பிரச்னையால் பொது வெளியில் விஜயகாந்த் வெளியில் வருவதில்லை. இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த்தை பார்க்க, கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த விஜயகாந்த், தொண்டர்களை நோக்கி கையசைத்தார்.