லேண்டரில் இருந்து ஒய்யாரமாய் இறங்கிய ரோவர்… வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியது. 41 நாட்கள் பயணம் செய்த சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23 ஆம் தேதி மாலை நிலவில் தரையிறங்கியது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதை இஸ்ரோ நேரலை செய்தது.

இதனை பார்த்த ஒட்டு மொத்த இந்தியர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இதன்மூலம் நிலவில் தடம் பதித்த 4வது நாடு என்ற பெருமையை பெற்ற இந்தியா, சூரிய ஒளியே படர்த நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் சொந்தமாக்கியது.

விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், தரையிறங்கியதற்கு பிறகு எடுத்த போட்டோக்கள் போன்றவற்றை வெளியிட்டு வந்தது இஸ்ரோ. மேலும் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பிறகு அதில் இருந்து பிரக்யான் ரோவரும் நிலவில் தரையிறக்கப்பட்டதாகவும், ரோவர் நிலவில் நடை பயணம் செய்வதாகவும் பெருமையுடன் தெரிவித்தது.

இருப்பினும் பிரக்யான் ரோவர் லேண்டரில் இருந்து இறங்கும் வீடியோவை இஸ்ரோ வெளியிடாமல் இருந்தது. இதனால் ரோவர் எப்படி நிலவில் தரையிறங்கியது என்பதை பார்க்க ஆர்வமாய் இருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரின் சாய்தள கதவு வழியாக ஒய்யாரமாக இறங்கி நிலவில் தடம் பதிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.

இதனை பார்த்த நெட்டிசன்கள் வா செல்லம்… வா செல்லம்… என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் பலர் இந்த அதிகாரப்பூர்வ காட்சியை காணதான் காத்திருந்ததாகவும் கூறி வருகின்றனர். சந்திரயான் 3 மிஷன் சார்ந்த அனைத்து பணிகளும் திட்டமிட்டப்படி சிறப்பாக நடைபெற்று வருதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.