
விஜய் 68 : அமெரிக்கா பறக்கும் விஜய், வெங்கட்பிரபு
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . இப்போது முன் தயாரிப்பு பணிகள் மற்றும் நடிகர், நடிகைகள், டெக்னீசியன் தேர்வு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதில் மாதவன், பிரபுதேவா, ஜெய் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏன்ஞ்சல்ஸ் செல்கிறார்கள். அங்கு விஜய் இந்த படத்தில் நடிப்பதற்கான லுக் டெஸ்ட்டை 3டி விஎப்எக்ஸ் ஸ்கேன் எனும் டெக்னாலஜி மூலம் வடிவமைக்க உள்ளனர். இதற்கு முன்பு இந்த டெக்னாலஜியை ஷாருக்கான் நடித்த ஃபேன், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .