அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறாரா விஜய்? -பலப்படுத்தப்படும் விஜய் மக்கள் இயக்கம்!

விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.


vijay 7விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த பரிமாணம்
பின்னர் அணியினர் மத்தியில் உரையாற்றிய புஸ்ஸி ஆனந்த், தமிழகம் அளவில் பல அணிகளுடன் பலம் வாய்ந்த இயக்கமாக விஜய் மக்கள் இயக்கம் உள்ளது. விஜய் மக்கள் இயக்கம் அடுத்து வேறு ஒரு பரிமாணம் எடுக்கவுள்ளது. அதற்கான முன்னெடுப்புகளை அமல்படுத்தி வருகிறது. மக்கள் இயக்கத்தின் அணிகளை வலுப்படுத்தி வருகிறோம். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களது சமூக வலைதள கணக்குகளில் தரம் தாழ்ந்து ஆபாசமாக பதிவிடக்கூடாது.
​நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுரைநீங்கள் அளிக்கும் பதில்கள் கருத்தியலாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இயக்கத் தலைமை வெளியிடும் பதிவின் லைக் மற்றும் ஷேரின் எண்ணிக்கை மில்லியனை தாண்ட வேண்டும். தலைமையின் ஒப்புதலின்றி மற்றவர்களின் பதிவுகளை லைக், ஷேர் செய்யக் கூடாது. மொழி, இனம், சாதி மத வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும் என்று கூறினார்.
புஸ்ஸி ஆனந்த் பேட்டிமுன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய புஸ்ஸி ஆனந்த், “3 லட்சம் பேர் வரை தகவல் தொழில்நுட்ப அணியில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து அணியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்கள் உள்ள விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டனர். தகவல் தொழில்நுட்ப அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தோம். அவர்களின் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். விஜய் அறிவுறுத்தலின் பேரில் மற்ற அணியினரின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவுள்ளது.” என்றார்.
​தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைஇந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சமூக வலைதள நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அத்துடன் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க விஜய் ரசிகர்கள் என 1000 பேர் வரை இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
​மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய விஜய்கடந்த மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சட்டமன்ற ரீதியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டியதோடு பரிசுகளையும் வழங்கினார். அப்போது விஜய் பேசியது அவரது அரசியல் நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்தது. நிகழ்வில் அம்பேத்கரையும், பெரியாரையும், காமராஜரையும் மாணவர்கள் படிக்க வேண்டுமென விஜய் அறிவுறுத்தினார். மேலும், விஜய் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு அரசியலுக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால், விஜய் தரப்பில் அது உடனடியாக மறுக்கப்பட்டது. மேலும், மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார் விஜய்.

அரசியல் நகர்வில் விஜய்கடந்த 15 வருடங்களாக விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வரும் நடிகர் விஜய்யின் சமீப கால நடவடிக்கைகள் அரசியல் சார்ந்தே உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தனது இயக்கத்தினரை மாலை அணிவிக்கச் சொல்லி அறிவுறுத்தியிருந்தார் விஜய். மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.