ஓணம் பண்டிகைக்கு பிரமாண்ட கொண்டாட்டம்| Onam is a grand celebration

பாலக்காடு:கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி-, கல்லுாரிகளில் பல்வேறு போட்டிகள், கலை நிழ்ச்சிகள் நடத்தி மகிழ்ந்தனர்.

கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகை நாளை, 27ம் தேதி முதல், 29 தேதி வரை மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. முன்னதாக, கடந்த, 20ம் தேதி முதல் 10 நாட்கள் பூக்கோலமிட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் என, மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று பாலக்காட்டில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில், ஓணம் பண்டிகை பிரமாண்டமாக கொண்டாடினர். மாவேலி மன்னரை வரவேற்கும் வகையில், பிரமாண்டமான பூக்கோலமிட்டனர்.

கேரள பாரம்பரிய திருவாதிரை நடனம், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கயிறு இழுத்தல் போட்டி, உறியடி, பூக்கோலம் போட்டி ஆகியவை நடந்தன. தொடர்ந்து ‘ஒணம் சத்யா’ என்றழைக்கப்படும், வடை, பாயாசம், கூட்டு, பொறியல், அவியல் என பிரமாண்ட விருந்து படைத்து பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, -கல்லுாரிகளுக்கு வரும், 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.