
'கிரிமினல்' படத்தில் மதுரைவாசிகள்
பர்சா பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் ஆகியோர் தயாரித்துள்ள படம் 'கிரிமினல்'. அறிமுக இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி இயக்கி உள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்து இருக்கிறார். ஒளிப்பதிவை பிரசன்னா எஸ் குமார் கையாண்டுள்ளார். கவுதம் கார்த்திக், சரத்குமார் , ரவீனா ரவி, ஜனனி ஐயர், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.
படம் பற்றி இயக்குநர் தக்ஷிணா மூர்த்தி கூறுகையில், “மதுரையை களமாகக் கொண்ட பல காதல் படங்கள் வந்துள்ளது. ஆனால் அதில் இருந்து 'கிரிமினல்' விதிவிலக்காக இருக்கும். நகரத்தில் நடக்கும் க்ரைம்-த்ரில்லரையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தப் படத்துக்காக மதுரையைச் சேர்ந்த பல உள்ளூர்வாசிகளை சொந்தக் குரலில் நடிக்கவும், டப்பிங் செய்யவும் வைத்துள்ளோம். ஒரு வயதான பெண்மணி டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது ஆச்சரியமடைந்து, 'உண்மையிலேயே மதுரையில் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா?' என்று கேட்டார். படப்பிடிப்பின்போது எனக்கு இருந்த மன அழுத்தம் முழுவதும் அவரது பாராட்டு வார்த்தைகளால் காற்றில் மறைந்தது” என்றார்.