வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாலக்காடு: ‘சந்திரயான் –3’ வெற்றி பயணத்தில், பாலக்காடு ‘இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரி’ (ஐ.டி.ஐ.,) பங்களிப்பு பாராட்டுக்குரியது என, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோவை- – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், கஞ்சிக்கோடு அருகே ஐ.டி.ஐ., அமைந்துள்ளது. இந்தியாவின் விண்வெளி பயணங்களில், 2012 முதல் இந்த நிறுவனம் பங்கேற்று வருகிறது.
‘சந்திரயான் -3’ பணியிலும் இந்த நிறுவனம் பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏவுதல் கருவிகளில் பயன்படுத்தும் எச்.எம்.எஸ்.ஏ., (Head Mount Safe Arm) தயாரிக்கும் பணி ஐ.டி.ஐ.,யிடம் வழங்கப்பட்டது.
![]() |
இதுகுறித்து, ஐ.டி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: மங்கள்யான் மற்றும் சந்திரயானுக்கு அளித்த சேவைகளின் தரத்தை மதிப்பிட்டு, இந்த பணியை ஐ.டி.ஐ.,க்கு வழங்கியது. நாட்டின் விண்வெளிப் பயணத்துக்கு தேவையான எச்.எம்.எஸ்.ஏ.,யும் ஆர்.எம்.எஸ்.ஏ.,யும் (Remote Mount Safe Arm) இங்கு தயாரிக்கப்படுகிறது.
ஏவுதல் செயற்கை கோள்கள் துல்லியமாக தரையிறக்க, ஆர்.எம்.எஸ்.ஏ., பயன்படுகிறது. ஒரு ஏவுதலுக்கு 10 முதல் 14 எச்.எம்.எஸ்.ஏ., பயன்படுத்தப்படும். 200 எச்.எம்.எஸ்.ஏ., தயாரிப்பதற்காக ஆர்டர் அளித்ததன் வாயிலாக, இஸ்ரோவின் நீண்ட கால பணிகளில் ஐ.டி.ஐ., இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘சந்திரயான் – 3’ வெற்றியால் நாடு பெருமிதம் கொள்ளும் இந்நிலையில், ஐ.டி.ஐ.,யின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement