சிஏஜி அறிக்கை… பிடிஆர் இருந்தா சீனே வேற… தேர்தல் ரூட் மாறுதே… லட்டு வாய்ப்பை மிஸ் பண்ணுகிறதா திமுக?

2009-10 காலகட்டத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது சிஏஜி அறிக்கை வெளியானது. அதில் இடம்பெற்றிருந்த 1,76,000 கோடி ரூபாய் ஊழல் விஷயத்தை பாஜக ஊதிப் பெரிதாக்கியது. இது தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கும் வித்திட்டது. இதேபோல் கடந்த ஆகஸ்ட் 8, 10 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடுகள் தொடர்பான சிஏஜி அறிக்கை வெளியானது.

சிஏஜி அறிக்கையில் பகீர்”நாங்களும் ஊழல் செய்ய மாட்டோம். பிறரையும் ஊழல் செய்ய விட மாட்டோம்” என்ற தாரக மந்திரத்துடன் 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, பல்வேறு துறைகளில் முறைகேடான வகைகளில் நடந்து கொண்டிருப்பதாக சமீபத்திய சிஏஜி அறிக்கை கூறுகிறது. அரசியல் கட்சிகளின் பார்வையில் சொல்ல வேண்டுமெனில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. இதை காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கையிலெடுத்து கொண்டு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு வருகின்றன.எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புஅடுத்த ஓராண்டில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. எனவே பாஜகவிற்கு எதிரான அஸ்திரமாக சிஏஜி அறிக்கையின் ஊழல் விவகாரங்களை ஒவ்வொன்றாக ஊதி பெரிதாக்க இந்தியா (INDIA) கூட்டணிக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அரசியல் களத்தை உற்றுநோக்கினால் அவ்வளவு வீரியத்துடன் எதிர்க்கட்சிகள் காய் நகர்த்துவதாக தெரியவில்லை. பாஜகவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பிராந்திய கட்சியாக பார்க்கப்படுவது திமுக.
​டார்கெட் திமுக அரசியல்ஏனெனில் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை தூசு தட்டுவது, சொத்து குவிப்பு வழக்குகளுக்கு புத்துயிர் ஊட்டுவது, ஒவ்வொரு மாநில துறையாக டார்கெட் செய்வது, சித்தாந்த ரீதியில் கடுமையாக விமர்சிப்பது, திராவிட மாடலை கேள்விக்கு உட்படுத்துவது என தமிழகத்தில் பாஜக மிக மிக உக்கிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக ஆர்.எஸ்.பாரதி போன்றோர் செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் அளிக்கும் விளக்கமும், டி.ஆர்.பாலு போன்றோர் நீதிமன்ற கதவுகளை தட்டி அவதூறு வழக்குகளை போடுவதும் என செயல்பட்டு வருகின்றனர்.
மத்திய அரசு துறைகளில் ஊழல் புகார்கள்ஆனால் லட்டு மாதிரி கிடைத்த சிஏஜி அறிக்கையை ஏன் கண்டு கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதுவும் புள்ளி விவரங்களுடன் கிடைத்த ஊழல் விவகாரத்தை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்ல வியூகம் வகுத்திருக்க வேண்டாமா? பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என பாஜகவிற்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டாமா? ”என் மண் என் மக்கள்” என்ற பெயரில் நடைபயணம் செய்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆளும் திமுக அரசு குறித்து காட்டமான கருத்துகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
அண்ணாமலை நடைபயணம்தங்கள் கட்சியின் எழுச்சியை காட்டிலும் திமுக அட்டாக் அரசியலை தான் அண்ணாமலை பெரிதாக கையாண்டு வருகிறார். அப்படி இருக்கும் போது சிஏஜி அறிக்கை விஷயத்தில் திமுக அரசு ஏன் சைலண்ட் மோடில் இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விஷயத்தில் வெறும் சமூக வலைதளப் பதிவோ, செய்தியாளர்கள் சந்திப்போ போதுமானதா எனவும் எண்ணத் தோன்றுகிறது.
​பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எங்கே?ஒருவேளை நிதித்துறை அமைச்சராக நல்ல பார்மில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்திருந்தால் சிஏஜி அறிக்கையை புட்டு புட்டு வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பாரோ? தமிழக அரசியல் களத்தை பரபரப்பிற்கு ஆளாக்கி இருப்பாரோ? போன்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 2024 மக்களவை தேர்தலுக்கு இந்தியா கூட்டணியில் திமுக முக்கியமான கட்சியாக பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவில் மிகவும் முக்கியமான மாநிலத்தை பிரதிபலிக்கிறது.
பாஜக எதிர்ப்பு அரசியல்அப்படி இருக்கையில் சிஏஜி அறிக்கை விஷயத்தில் திமுகவின் மவுனம் பின்னணியில் ஏதேனும் உள்குத்து அரசியலாக இருக்குமா? பாஜக எதிர்ப்பு அரசியல் ஒன்று தானே இந்தியா கூட்டணியின் பிரதான இலக்கு. அதற்கு தென்னிந்தியாவில் இருந்து ஆக்ரோஷமான அரசியல் எதிர்ப்பு குரல் திமுகவிடம் இருந்து இந்நேரம் வெடித்திருக்க வேண்டாமா என்ற மில்லியன் டாலர் கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.