சென்னையில் பள்ளிக் குழந்தைகளுடன் சைக்கிளிங் சென்ற அஜித் குமார்: வைரல் வீடியோ

அஜித் குமாருக்கு பைக் ரைடு செல்வது என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஜெர்மனி, நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளில் பைக் ரைடை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியிருக்கிறார் அஜித்.

ரஜினிக்கு யோகி ஆதித்யநாத் தான் Role Model – இயக்குனர் பிரவீன் காந்தி
இந்நிலையில் அவர் சென்னையில் பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ரைடு சென்றிருக்கிறார். தலைக்கவசம் உயிர்கவசம் என்பதில் உறுதியாக இருக்கிறார் அஜித்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

பைக்கில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சைக்கிளில் சென்றபோதும் தலைக்கவசம் அணிந்திருக்கிறார்.

குழந்தைகளுடன் சேர்ந்து அவர் சைக்கிளில் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

பைக் ரைடை அடுத்து அஜித் குமார் சைக்கிள் ரைடு கிளம்பிவிட்டார். இது சூப்பராக இருக்கிறதே என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

ஜீன்ஸ், வெள்ளை நிற சட்டையில் சிம்பிளாக இருந்தார் அஜித் குமார். அவரை இப்படி குழந்தைகளுடன் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

கெரியரை பொறுத்தவரை மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அஜித் குமார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்திற்கு அஜித்தின் ரசிகனான அனிருத் இசையமைக்கிறார். விடாமுயர்சி படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வருகிறது. இந்நிலையில் படத்தை லைகா நிறுவனம் கைவிட்டுவிட்டது என தகவல் வெளியானது.

விடாமுயற்சி கைவிடப்பட்டதா என ரசிகர்கள் கவலைப்பட்ட நேரத்தில் லைகா நிறுவன தலைவர் சுபாஷ்கரன் நல்ல செய்தி தெரிவித்துள்ளார். ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சுபாஷ்கரனிடம் விடாமுற்சி என்னவானது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்

விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என சுபாஷ்கரன் கூறியதை கேட்ட பிறகே அஜித் குமார் ரசிகர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். விடாமுயற்சி படத்தில் த்ரிஷா, தமன்னா என இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்களாம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்தபோது அஜித் குமார் நரைத்த முடியுடன் இருந்தது குறித்து அண்மையில் பேசியிருந்தார் தமன்னா. இந்நிலையில் மீண்டும் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.

அடங்கமறுக்கும் ஜெயிலர்: 17வது நாளில் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து முடித்த கையோடு அஜித்துடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. விஜய்க்கு மட்டும் அல்ல அஜித் குமாருக்கும் ராசியான ஹீரோயின்களில் ஒருவர் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

மகாத்மா கொலையை ஆதரிப்பவர்கள் எப்படி ஜெய்பீமுக்கு தேசிய விருது கொடுப்பாங்க: பிரகாஷ்ராஜ்

முன்னதாக த்ரிஷாவுக்கு பதில் தான் தமன்னாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக பேச்சு கிளம்பியது. அதன் பிறகு செகண்ட் ஹீரோயினாக தமன்னாவை நடிக்க வைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

விடாமுயற்சி படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் துவங்கும் என்றும், வெளிநாட்டில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. படத்தை 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.