நீட் கீட்டு எல்லாம் தூக்கிபோடுங்க… தமிழ்நாட்டு பாடம் தான் நாடு ஃபுல்லா வைக்கணும்… மன்சூர் அலிகான் ஒரே போடு!

நீட் தேர்வு… பணக்காரரர்களுக்கு மட்டும் தான் மருத்துவ சீட்டா? ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவர் ஆக வேண்டும் எனக் கனவு மட்டும் தான் காண வேண்டுமா? என்ற கேள்வியை தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் எழுப்பி வருகின்றன. அரசியல் ரீதியாக மாறுபட்டு நின்றாலும் தமிழக அரசியல் கட்சிகள் ஒரே புள்ளியில் இணையும் இடம் எது என்று கேட்டால் தற்போதைய சூழலில் நீட் மட்டுமே.

​நீட் மரணங்கள்அனிதா தொடங்கி ஜெகதீஸ்வரன் வரை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு மூலம் மருத்துவ சீட் கிடைக்காத காரணத்தால் தங்கள் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நன்கு படிக்கக் கூடியவர்கள். கிட்டதட்ட சிறு வயது முதல் தோல்வி மனப்பான்மையை காணாதவர்கள். மருத்துவம் ஒன்றே தங்கள் வாழ்வின் இலக்கு என்ற எண்ணத்தில் வளர்ந்தவர்கள். அதுமட்டுமின்றி நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.நீட் தேர்விற்கு எதிரான குரல்இதனால் தோல்வியில் இருந்து மீளவும், அடுத்த இலக்கை நோக்கி வாழ்க்கையை நகர்த்தவும், பொருளாதார ரீதியில் போதிய ஒத்துழைப்பு கிடைக்காத நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இவர்களை மீட்டெடுக்க வேண்டிய அரசின் கடமை. சமூகத்திற்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. எனவே தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். நீட் தேர்விற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்க வேண்டும்.
​உதயநிதி ஸ்டாலின் உறுதிஇதை நீக்கும் முழு பொறுப்பை நானே எடுத்து கொள்கிறேன் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் கூறியிருந்தார். இதுதொடர்பாக திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் நீட் தேர்வு குறித்து சில விஷயங்களை தெரிவித்துள்ளார். திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்தாலும் அரசியல் பார்வை கொண்டவர்.
​மன்சூர் அலிகான் பேட்டிதமிழக அரசியல் களம் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவிப்பார். இவரது கலகலப்பான மற்றும் எதார்த்தமான பேச்சு மக்கள் மத்தியில் கவனம் பெறுவதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் நீட் குறித்து சமீபத்தில் செய்தியாளர்கள் பேசுகையில், கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிச்ச தமிழன்கள் தான் இவ்வளவு சாதிச்சுருக்காங்க.
​தமிழ்நாட்டு பாடநூல் தான் வேண்டும்அப்ப நீட் கீட்டுலாம் தூக்கி போடுங்க. எந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் எதுவும் வைக்கக் கூடாது. தமிழ்நாட்டு பாடநூல் தான் இந்தியா முழுமைக்கும் வைக்கணும். சில விஷயங்களை மாத்திட்டு அவங்க சாதனை பண்ண மாதிரி பண்றாங்க இல்லையா? அது அவங்களுக்கே கேவலமான விஷயம் என்று பதிலளித்தார்.மத்திய அரசிடம் கேள்விசமீபத்தில் கூட மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீது மிகக் கடும் விமர்சனங்களை நடிகர் மன்சூர் அலிகான் வைத்திருந்தார். மக்களுக்காக மத்திய அரசு என்ன செய்தது? நேரில் பார்த்தால் விடாதீர்கள். எழுதி தருமாறு கேட்டு வாங்கி கொள்ளுங்கள். இதற்காக 500 பேர், 5000 பேர், 5 லட்சம் பேர் என எப்படியோ குழுவாக சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.