பசங்க பள்ளிக்கூடம் வரலன்னா பெற்றோருக்கு சிறை… மிரட்டும் சவுதி அரேபியா!

சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் அந்நாட்டு குடிமக்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் வேலை மற்றும் தொழில் நிமித்தமாக குடும்பத்துடன் குடியேறி வசித்து வருகின்றனர். அவர்களின் பிள்ளைகள் அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சவுதி அரேபியாவில் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக அந்நாட்டு அரசு சட்டத்திட்டங்களை கடுமையாக்கியுள்ளது.

சிறை தண்டனை

அதன்படி மாணவர்கள் முறையான காரணம் இன்றி 20 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருந்தால் பெற்றோர் அல்லது மாணவரின் பாதுகாவலருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. பெற்றோர் கைது செய்யப்படும் நேரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் சவுதி அரேபிய அரசின் கல்வித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.

விண்வெளிக்கு போகும் பெண் ரோபோ ‘வியோமித்ரா’… எதுக்காக தெரியுமா?

பள்ளிக்கூடத்திற்கு வராமல் இருந்தால்

அதாவது ஒரு மாணவர் 20 நாட்களுக்கு மேல் முறையான காரணமின்றி பள்ளிக்கூடத்திற்கு வராமல் இருந்தால், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் நாட்டின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த கனிமொழி..

நீதிபதிக்கு அதிகாரம்

விசாரணை முடிந்ததும், வழக்கு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும் மாணவர் பள்ளிக்கு வராமல் இருப்பதில் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கவனக்குறைவு இருந்தால் அதற்குரிய சிறைத்தண்டனை விதிக்க நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வராத மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு எதிரான சட்ட நடைமுறைகள் பல கட்டங்களை உள்ளடக்கியது என்றும் சவுதி அரேபிய கல்வித்துறை தெரிவித்துள்ளது.

திருப்பதியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை… மூழ்கிய மாட வீதிகள்.. வாகனங்கள்… பக்தர்கள் கடும் அவதி!

கல்வி தரத்தை உயர்த்த

பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கும் என்றும், கல்வி அமைச்சகம் மேற்கொள்ளும் என்றும் சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் வரும் கல்வி ஆண்டில் இருந்து இந்த உத்தரவு நடைமுறை படுத்தப்படும் என்றும் தெரிவிததுள்ளது சிறுசிறு குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி வரும் சவுதி அரேபிய அரசு, தற்போது மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காகவும் கடுமையான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.