பாலக்காடு: செம்பை சங்கீதோற்ஸவத்தில் கலந்து கொள்வதற்கான ஆன்லைன் பதிவு துவங்கியுள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஆண்டு தோறும் ஏகாதசி உற்ஸவத்தையொட்டி தேவஸ்தானம் 15 நாள் நீண்ட சங்கீத உற்ஸவத்தை நடத்துவது வழக்கம்.
செம்பை வைத்தியநாத பாகவதரை நினைவூட்டும் வகையில் நடத்தும் சங்கீதோற்ஸவம் நடப்பாண்டு நவ. 8ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கான ஆன்லைன் பதிவு துவங்கியுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரி விஜயன் கூறியதாவது: http://guruvayurdevaswom/chembaisangeetholsavam/chembaisangeetholsavam என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு 2023 ஆக. 10ம் தேதி 10 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு குழுவில் ஐந்து பேர் வரை சங்கீதார்ச்சனை நடத்தலாம். குழுவில் உள்ள ஒருவர் விண்ணப்பித்தால் போதும்.
நன்றாக படித்த 10 கீர்த்தனங்களின் பட்டியல் அளிக்க வேண்டும். குருநாதரின் சாட்சியம் அடங்கும் கடிதம் சங்கீதோற்ஸவத்திற்கு வரும்போது தேவஸ்தான அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்வோர் இ–மெயில் வாயிலாக அறிவிக்கப்படும். அவர்களுக்கு அழைப்பிதழ் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து எடுத்துக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 0487-2 556335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement