தளபதி 68 படத்தில் பிகில் ஃபார்முலா: விஜய்ணாவுக்கு ஒரு ஹிட் பார்சல்

Venkat Prabhu: விஜய்யை தன் படத்தில் அப்பா, மகனாக நடிக்க வைக்கப் போகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு என கூறப்படுகிறது.

​தளபதி 68​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். அந்த படத்தை அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். லியோவை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜய். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு லியோ படப்பிடிப்பு நடந்தபோதே வெளியானது. இந்நிலையில் தளபதி 68 குறித்து சூப்பர் தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.லியோ​Leo ஆடியோ லான்ஞ்​​விஜய்​தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று முன்பே தகவல் வெளியானது. இந்நிலையில் தான் அவர் அப்பா, மகனாக நடிக்கவிருப்பது தெரிய வந்துள்ளது. முன்னதாக அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் அப்பா, மகனாக நடித்திருந்தார் விஜய். அந்த படம் ஹிட்டானது. அவர் அப்பா, மகனாக மீண்டும் நடிப்பதால் தளபதி 68 படமும் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான் என நம்பப்படுகிறது.​லுக் டிசைன்​அப்பா, மகன் என்றால் பாசக்காரர்கள் இல்லையாம். அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே ஆகாதாம். அதில் ஒரு விஜய் ரா ஏஜெண்டாக வருவாராம். தளபதி 68 படத்திற்கான லுக் டிசைன் அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து கொண்டிருக்கிறது. தளபதி 68 படத்தில் பல பிரபல நடிகர்களை நடிக்க வைக்கப் போகிறாராம் வெங்கட் பிரபு. அது குறித்து பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.லைகா தயாரிப்பில் இயக்குநராகும் விஜய் மகன்

​ஜோதிகா​தளபதி 68 படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகனும் நடிக்கவிருக்கிறார்கள். முன்னதாக மகன் விஜய்க்கு ஜோடியாக உப்பேனா படம் புகழ் க்ரித்தி ஷெட்டி நடிப்பார் என கூறப்பட்டது. அவர் ஏற்கனவே வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்தில் ஹீரோயினாக நடித்ததால் மீண்டும் அவரை ஹீரோயினாக்குகிறார் என பேசப்பட்டது.

​Thalapathy 68: விஜய்யின் ரசிகையை தளபதி 68 ஹீரோயினாக்கும் வெங்கட் பிரபு?

​சிம்பு​முன்னதாக தளபதி 68 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானபோது அதை குறுக்கெழுத்து போட்டி போன்ற வீடியோ மூலம் காட்டினார்கள். அதில் விஜய், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், யுவன் ஆகியோரின் பெயர்கள் இருந்தது. ஆனால் அதே குறுக்கெழுத்து தாளில் எஸ்.டி.ஆர்., எஸ்.கே., ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரின் பெயர்களும் இருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்தார்கள்.

​தளபதி 68 படத்தில் விஜய்யுடன் நடிக்கும் சிம்பு, சிவகார்த்திகேயன், ஜூனியர் என்.டி.ஆர்.?

​படப்பிடிப்பு​தளபதி 68 படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பே துவங்காத நிலையில் தளபதி 68 பற்றி ரசிகர்கள் தினமும் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். விஜய்யை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று பல காலமாக ஆசைப்பட்டவர் வெங்கட் பிரபு. அதனால் அவர் விஜய்க்காக ஸ்பெஷலாக ஒரு கதை தயார் செய்திருப்பார் என நம்பப்படுகிறது.

​மட மடன்னு வளர்ந்துட்ட நயன்தாரா மகன்கள்

​அப்டேட்​லியோ படம் இன்னும் ரிலீஸாகாததால் தளபதி 68 குறித்து அப்டேட் கொடுக்காமல் இருக்கிறார் வெங்கட் பிரபு. எங்காவது அவரை பார்த்தால் தளபதி 68 பற்றி ஏதாவது சொல்லுங்களேன் என செய்தியாளர்கள் கேட்கிறார்கள். லியோ வரட்டும் சொல்கிறேன் என்கிறார். லியோ ரிலீஸுக்கு பிறகு அவ்வப்போது அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.