பிரக்யான் ரோவருக்கு வந்த புதிய சிக்கல்: உடனே சுதாரித்து செய்த அடடே சம்பவம்! வெற்றி களிப்பில் இஸ்ரோ!

பிரக்யான் ரோவர் தனது பயணத்தின் போது சந்தித்த சிக்கல் ஒன்றை எவ்வாறு முறியடித்து வெற்றிப் பயணம் மேற்கொள்கிறது என்பதை இஸ்ரோ தெரியப்படுத்தியுள்ளது.

சந்திராயன் 3 விண்கலத்திலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரை இறங்கிய நிகழ்வை உலகமே கொண்டாடி வருகிறது.

நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்குவதற்கான முயற்சியில் இறங்கிய கடைசி 15 நிமிடங்கள் திக் திக் என்று திகில் கிளப்பியது. எந்த பிரச்சினை எழுந்தாலும் அதை சமாளிக்க பிளான் ஏ, பிளான் பி என பக்காவாக திட்டம் வகுத்து இஸ்ரோ செயலாற்றியது. தரையிறங்குவதற்கான இடத்தை தேர்வு செய்த போது உடனடியாக அது இறங்கவில்லை. தனது சென்சார் மூலம் அங்கு பாறை இருப்பதை உணர்ந்த லேண்டர் சற்று தள்ளி தரை இறங்கி அசத்தியது.

மகளிர் உரிமைத் தொகையில் முக்கிய தளர்வு: கடைசி நேரத்தில் ஸ்டாலின் அறிவிப்பு!

லேண்டர் தரை இறங்கினாலும் அதன் உள்ளிருந்து ரோவர் உடனடியாக வெளியேறிவிடவில்லை. லேண்டர் தரை இறக்கத்தால் எழுந்த புகை மண்டலம் அடங்கும் வரை பொறுமை காத்து மெல்ல லேண்டருக்குள் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து வருகிறது.

லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறியதையும் இஸ்ரோ உடனடியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதேபோல் அதன் புகைப்படங்கள், வீடியோக்களையும் உடனடியாக வெளியிடவில்லை. பொறுமையாக ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வருகிறது.

ரோவர் சில நாள்கள் நிலவில் ஊர்ந்து வந்து ஆய்வு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோவரின் செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறது.

அந்த வகையில் இஸ்ரோ வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்டில், ரோவர் நிலவில் சுற்றி வருவது குறித்த முக்கிய தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 27ஆம் தேதி ரோவர் சென்று கொண்டிருந்த போது அதன் பாதையில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பெரிய பள்ளம் ஒன்று வந்துள்ளது. அதை மூன்று மீட்டர் தொலைவுக்கு முன்பாகவே அடையாளம் கண்டுகொண்ட ரோவர் தனது பாதையை உடனடியாக மாற்றி வேறு பாதையில் பாதுகாப்பாக சென்றுள்ளது. இந்த தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.