இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை ஏற்பட்டு உள்ளது. வன்முறையைத் தொடர்ந்து 3 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இரு இன மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்து வந்த நிலையில், தலைநகர் இம்பாலில் தனித்தனி சம்பவங்களில் 3 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் பல சுற்று கண்ணீர் புகை குண்டுகளை வீசி அப்பகுதிக்குள் நுழைய விரும்பிய கூட்டத்தை […]
