9 ஆண்டுகளில் வங்கிகளில் 50 கோடி கணக்குகள் துவக்கம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்| Opening of 50 crore accounts in banks in 9 years: Nirmala Sitharaman is proud

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஜன் தன் யோஜனா திட்டம் இந்தியாவின் நிதி சேமிப்பு கொள்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும், 50 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த திட்டத்தின் கீழ் முறையான வங்கிக் கணக்கைத் துவங்கியுள்ளனர் எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் துவங்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் இன்றுடன்(ஆகஸ்ட் 28) நிறைவடைந்த நிலையில், மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜன்தன் யோஜனாவில், 55.5 சதவீத வங்கிக் கணக்குகள் பெண்களால் துவங்கப்பட்டுள்ளன.

இது தவிர, கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 67 சதவீத கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இது உலகின் மிகப்பெரிய நிதி உள்ளடக்க முயற்சிகளில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தில், மார்ச் 2015ல் 14.72 கோடியாக இருந்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 3.4 மடங்கு அதிகரித்து 16 ஆகஸ்ட் 2023க்குள் 50.09 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.