அப்படியே அப்பாவை உரித்து வைத்திருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள்!

வட கொரியாவின் கடற்படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் தனது 10 வயது மகளுடன் பங்கேற்றார். அதிபர் கிம் ஜாங் உன் சமீப காலமாக தனது மகளுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் கடற்படை நாள் தின விழாவில் பங்கேற்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது 10 வயது மகள் கிம் ஜு ஏவுடன் பங்கேற்று ராணுவ அணிவகுப்பை ஏற்றார். கடற்படை அதிகாரிகள் கிம் ஜாங் உன்னின் மகளுக்கும் சல்யூட் அடித்து கைக்குலுக்கி மரியாதை அளித்தனர்.

வரலட்சுமியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரும் என்.ஐ.ஏ: போதை பொருள் வழக்கு- எப்படி சிக்கிருக்காருன்னு பாருங்க!

தொடர்ந்து நடைபெற்ற கைப்பந்து போட்டியையும் தனது மகளுடன் கண்டுகளித்தார் கிம் ஜாங் உன். ஆரம்பத்தில் தனது குடும்பத்தினர் குறித்த தகவல்களை ரகசியமாக வைத்திருந்தார் கிம் ஜாங் உன். கிம் ஜாங் உன் அதிபரான பிறகு அவரது சகோதரி மட்டும் அவ்வப்போது அரசு விழாக்களில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் தற்போது தனது மகளையும் அரசு நிகழ்ச்சிகளில் முன்னிலைப்படுத்தி வருகிறார் கிம் ஜாங் உன். கிம் ஜாங் உன் மகளின் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், அப்படியே அப்பாவை உரித்து வைத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

ஹீரோ லுக்கில் வனிதா அக்கா மகன் விஜய் ஸ்ரீஹரி… வைரலாகும் புகைப்படங்கள்!

கடந்த பிப்ரவரி மாதம் தனது மகளின் பெயரான கிம் ஜு ஏ என்ற பெயரை அந்நாட்டில் யாரும் வைக்கக்கூடாது என வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். அந்த பெயருள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் பெயரை ஒருவாரத்திற்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் கெடு விதித்திருந்தார் கிம் ஜாங் உன் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அடிக்கடி அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறார். மேலும் அரசுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு கடுமையான மரண தண்டனை விதித்து வருவதாகவும் மக்களுக்கு எதிராக கடுயைமான கட்டுப்பாடுகளையும் கிம் ஜாங் உன் விதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கனிமொழி குறித்து தரக்குறைவாக கருத்து… ஹெச் ராஜா விவகாரத்தில் கைவிரித்த ஹைகோர்ட்… 3 மாதம் கெடு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.