பெங்களூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள ராகவேந்திரா மடத்தில் சாமி தரிசனம் செய்தார். உலக சினிமாவில் முக்கியமான நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முன் பேருந்து நடத்துனராக இருந்தார். இவரது நண்பர் கொடுத்த உத்வேகத்தால் சென்னை வந்த ரஜினி, இன்று உலகமே கொண்டாடும் நடிகராக இருக்கிறார்.
