டில்லி இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.200 குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டம் முடிந்த பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவர், ”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க ஒப்புதல் அளித்துள்ளது. […]
