சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கான கொடுப்பனவுகள் தொடர்பாக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு – கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த

உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் மத்திய நிலையங்கள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலே அமைக்கப்பட்டுள்ளதாகவும் நீண்ட தூரங்கள் செலவழித்து சென்று திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்காக விடைத்தாள் திருத்துனர்களுக்கு 2,000 ரூபா உடனடிக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சாதாரண தரப் பரீட்சை மத்திய நிலையங்கள் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியளாலர்களுடனான சந்திப்பின் போது கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அதனால் சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்துனர்களுக்கு இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படாது போகலாம். எனினும், ஆசிரிய தொழிற் சங்கங்களினால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு அவர்களுக்கு இரண்டு நாட்கள் கடமை விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதை விட உடனடிக் கொடுப்பனவை அதிகரித்தல் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்று தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் 5400 பட்டதாரிகளுக்கு புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளதாகவும், அதில் 1700 பட்டதாரிகளை தேசிய பாடசாலைகளுக்கும், எதிர்காலத்தில் ஆசிரிய சேவை கொள்கைக்கு இணங்க திறந்த போட்டிப் பரீட்சையொன்றை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவ்வாறே மலையகத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு ஆசிரிய உதவியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 அத்துடன் சம்பளப் பிரச்சினையை முடிவிற்குக் கொண்டு வருதல் தொடர்பாக மாத்திரமன்றி, மாணவர்களின் கல்வி தொடர்பாக கூடிய கவனம் செலுத்துவதில் காணப்படும் குறைபாடு, கற்றல் செயற்பாடுகளை முழுமையாக மேற்கொள்வதற்காக அதிக காலம் கற்பித்து, கூடிய அர்ப்பணிப்பைச் செய்வதற்கு, ஆசிரியர்களின் கவனத்தை செலுத்தாதுவிடின் மாணவர்களுக்கு பாடசாலைக் கல்வி தொடர்பாகக் காணப்படும் நம்பிக்கை குறைவடையக் கூடும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.