நாமக்கல்; அதிமுக-வில் இணைந்த திமுக-வினர் | ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு பூங்கா – News In Photos

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மாணவிகள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடினர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள கிராமமக்கள், தாங்கள் குடியிருந்த பகுதி டோல்கேட்டுக்காக கையகப்படுத்தப்பட்டதால், ஊரை காலி செய்து கோயில் வளாகத்துக்குள் குடியேறியிருக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி தி.மு.க வார்டு உறுப்பினர்கள், தி.மு.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தனர்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான உணர், செயல்திறன் பூங்கா சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறக்கப்பட்டது.
தென்காசி:

அய்யாபுரம், வேதம்புதூர், கடையநல்லூா் வட்டங்களுக்கு உட்பட்ட கொடிக்குறிச்சி , சிவராமப்பேட்டை கிராமங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் உதவித் தொகைக்காக விண்ணப்பதார்களை ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டு, விசாரணை செய்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்.
ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் சூடு தணிக்க இளநீர் அருந்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய ஆசிரியைகள்.
ராமநாதபுரத்தில் கடத்தப்பட்ட தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளைக் கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதுபோல் பேசியவருவதாக, திண்டுக்கல் ஐ.லியோனி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோயிலில் அத்தப்பூ கோலமிட்டு சுவாமியை வழிபட்ட பெண்கள்.
ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெறுகிறது.
ஓணம் பண்டிகை தினத்தையொட்டி ஈரோட்டில் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள், தங்கள் வீடுகளில் மாவேலி மன்னரை வரவேற்று அத்தப்பூ கோலமிட்டனர்.
சென்னை மகாலிங்கபுரத்தில் இருக்கும் ஐயப்பன் கோயிலில் திருவோணப் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காலை முதல் வந்து வழிபட்டுச் சென்றனர்.
கரூர் காந்திகிராமம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஓணம் கொண்டாடிய மாணவர்கள்.
மதுரையில் ம.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாளில் நடைபெறவிருக்கும் மாநாட்டு திடலை பார்வையிட்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் முடிதிருத்துவோர் சங்கத்தினர் போராட்டம்.
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.