மும்பையிலுள்ள மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்துக்கு இன்று அப்பர் வார்தா அணைக்கட்டு திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்துவதற்காக வந்திருந்தனர். அவர்களில் சிலர் தலைமைச் செயலகத்துக்குள் சென்றனர். அவர்கள் மேல் தளத்திலிருந்து கீழே குதித்தனர். அடிக்கடி போராட்டம் நடத்துவதற்காக மந்த்ராலயாவுக்கு வருபவர்கள், மேலே இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நடந்தது வந்ததால், மந்த்ராலயாவின் முதல் தளத்தில் தடுப்பு வலை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த தடுப்பு வலைமீது இன்று விவசாயிகள் திடீரென குதித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், அவர்களும் வலையில் இறங்கி விவசாயிகளை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் வராமல் போராட்டம் நடத்தினர். இதனால் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் தாதாஜி தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதுகாப்பு வலையில் குதித்துப் போராட்டம் நடத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டு, மரைன் டிரைவ் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், “நாங்கள் கடந்த 105 நாள்களாக தர்ணா நடத்தி வருகிறோம். ஆனால் அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. அணைக்கட்டு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை.

எனவேதான் இந்த விபரீத முடிவை எடுத்தோம்” என்று தெரிவித்தனர். விவசாயிகளின் போராட்டம் சோஷியல் மீடியாவில் வைரலானது. மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் ஓடும் வார்தா ஆற்றில் இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள், தங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, மும்பை ஆசாத் மைதானத்தில் 105 நாள்களாக தர்ணா போராட்டம் நடத்தினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY