சென்னை: மெக்காவிற்கு புனித யாத்திரை சென்று இருக்கும் ராக்கி சாவந்த் தன் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக கதறி அழுதபடி வீடியோவை வெளியிட்டுள்ளார். பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் ரித்தேஷை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே அவரைவிட்டு பிரிந்தார். பின்னர் ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
