வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹாராஷ்டிராவில் யெஸ் வங்கியில் ரூ. 5000 கோடி மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியுள்ள வாத்வான் சகோதரர்களுக்கு மும்பை சிறையில் ராஜ உபச்சாரம் நடப்பதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமை இடமாக வைத்து, யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் முறைகேடாக கடன்களை வழங்கி ரூ. 5000 கோடி மோசடி செய்த வழக்கில் ராணா கபூரை கடந்தாண்டு அமலாக்கத் துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக டி.எச். எப். எனப்படும் தீவான் ஹவுசிங் பைனான்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களான வாத்வான் சகோதரர்கள் மீதும் அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிந்ததது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கபில் வாத்வான், தீரஜ் வாத்வான் ஆகியோருக்கு சிறையில் சட்டவிரோதமாக பல்வேறு சலுகைகளுடன் ராஜமரியாதை அளித்து வரும் வீடியோவை ஆங்கில செயதி சேனல் வெளியிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement