வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: இந்தாண்டு அமர்நாத் யாத்திரையில் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கியது.வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
மொத்தம் 62 நாட்கள் நடபெறும் அமர்நாத் யாத்திரையில் 21-ம் தேதிய நிலவரப்படி 4 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்தாண்டு 3 லட்சத்து 4 ஆயிரத்து 493 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்தாண்டு அமர்நாத் யாத்திரையின் போது உடல்நலக்குறைவு காரணங்களால் 70 பேர் உயிரிழந்தனர். இந்தாண்டு 40 உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு அமெரிக்கா, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா நாட்டவர்களும் பங்கேற்றனர். பாட்மின்டன் வீராங்கனை சாய்னாநெவல், பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஆகிய பிரபலங்களும் பங்கேற்றனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement