ஆப்பிள் இன்க் நிறுவனம் செப்டம்பர் 12ம் தேதி நடக்கவிருக்கும் நிகழ்வுக்கான வரவேற்பை அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 12ம் தேதி காலிஃபோர்னியா பகுதியில் உள்ள கியூபெர்ட்டினோவில் நடக்கவிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு நிகழ்வில் அனைவரும் இணைந்து கொள்ளுங்கள் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐபோன் 15 வெளியீடு!
ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் மொபைல்கள் வெளியிடப்படும். அதன்படி, ஐபோன் 15 சீரிஸ் மொபைல்கள் மற்றும் அதோடு சேர்த்து ஆப்பிள் வாட்ச் மற்றும் வாட்ச் ப்ரோ உள்ளிட்டவைகளும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டைப் – C சார்ஜிங் போர்ட்
இந்தாண்டு வெளியாகும் ஐபோன்கள் டைப் – C சார்ஜிங் போர்ட் வசதியோடு வெளியாகும். ஐரோப்பியாவில் அமலாக்கப்பட்டுள்ள புதிய சட்டங்களின்படி, அங்கு வெளியாகும் டிவைஸ்களுக்கான சார்ஜர்களை UCD (Universal Charging Device) அடிப்படையில் வெளியிட வேண்டும் என்ற நிலை நிலவுகிறது. 2024ம் ஆண்டுக்குள் அனைத்து டிவைஸ்களும் இந்த நிலையை எட்ட வேண்டும் என்பதே இலக்கு.
புதிய IOS அப்டேட்
மேலும், புதிய IOS அப்டேட்டுகள் கூட வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலிஃபோர்னியாவில் காலை 10 மணி என்றால் இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறும். எனவே, பெரிய அப்டேட்டுக்கு ரெடியா இருங்க.