டில்லி நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு இந்தியாவில் ஜி 20 மாநாடு வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜி-20 உச்சி மாநாட்டுக்கான இந்த ஆண்டு தலைமையை இந்தியா ஏற்று நடத்தியது. நேற்றும், இன்றும் டில்லியின் பாரத் மண்டபத்தில் உச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. முதல் நாளில் சர்வதேச விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்கான தீர்மானம் நிறைவேறி வரலாற்று ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன. பிறகு வந்திருந்த விருந்தினர்களுக்குப் பாரம்பரிய இசை கச்சேரியுடன் கூடிய, இரவு விருந்தும் வழங்கப்பட்டது. இரண்டாம் நாளான இன்று ஜி-20 தலைமைத்துவம் […]
