பெங்களூரு, : நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே, ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று பெங்களூரு வருவதை ஒட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டில்லியில் நடந்த ‘ஜி – 20’ உச்சி மாநாட்டில் பங்கேற்க, நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே வந்திருந்தார். மாநாடு முடிந்த நிலையில், ஒரு நாள் அரசு முறை பயணமாக, இன்று தனி விமானத்தில் பெங்களூரு வருகிறார்.
கர்நாடகாவில் இயங்கும் நெதலர்லாந்து நாட்டின் 60 நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் பங்கேற்கும் பொருளாதார திட்ட நிகழ்ச்சியை, தனியார் நட்சத்திர ஹோட்டலில் துவக்கி வைக்கிறார்.
பின், பரபரப்பு மிக்க சர்ச் தெருவை பார்வையிடுகிறார். நகரின் கங்காநகரில் உள்ள நெதர்லாந்து துணைத் துாதரகத்திற்கு சென்று, நெதர்லாந்துடன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களுடன் கலந்துரையாடுகிறார்.
நாகவராவில் உள்ள அந்நாட்டு நிறுவனமான என்.எக்ஸ்.ஓ., கண்டுபிடிப்பு ஆய்வகத்தையும் பார்வையிடுகிறார். மேலும், கர்நாடகாவில் செயல்படும் டச்சு நிறுவனங்களுடன் வட்டமேஜை விவாதத்தில் பங்கேற்கிறார்.
நெதர்லாந்து பிரதமர் வருகையை ஒட்டி, அவர் பயணிக்கும் சாலைகள், பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement