வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சாம்ராஜ்பேட், கர்நாடகாவில், தனியார் போக்குவரத்துச் சங்கங்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது, பெங்களூரில் நான்கு தமிழக அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது.
கர்நாடக அரசின் இலவச பஸ் பயண திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரில் தனியார் போக்குவரத்துச் சங்கங்கள்வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
நேற்று முன்தினம் மதியம் போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை தமிழகத்தின் திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுாரிலிருந்து பெங்களூரு நோக்கி வந்த, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம், விழுப்புரம் பணிமனைகளுக்குச் சொந்தமான நான்கு அரசு பஸ்கள் மீது, பெங்களூரு மைசூரு சதுக்கம் பகுதியில், மர்மநபர்கள் கல்வீசி தப்பினர்.
இதில் பஸ்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. அதிர்ஷ்டவசமாக பயணியருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இது குறித்து வழக்கு பதிவு செய்த பெங்களூரு போலீசார், பஸ்கள் மீது கல்வீசியவர்களை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement