கொல்லம் :கேரளாவின் கொல்லம் மாவட்டம் அஞ்சால் பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் குரிசுமுக்கு பகுதியில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது.
இதற்காக ரோடுரோலர் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அஞ்சால் பகுதியைச் சேர்ந்த வினோத், 37, என்பவர் அங்கு வந்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ரோடுரோலர் முன் அவர்
அயர்ந்து துாங்கி விட்டார். இதையறியாத டிரைவர், அதை இயக்கியபோது, ரோடுரோலர் ஏறியதில், வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement