சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்காகத் தமிழக ஆளுநர் ரவி அமைத்த குழுவை தமிழக அரசு மாற்றி உள்ளது. தமிழக ஆளுநர் ஆர். என் ரவிக்கும், ஆளும் திமுக தரப்பிற்கும் பல்வேறு விவகாரத்தில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி ஏற்றுக்கொள்ளாதது இரண்டு தரப்பு மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதுவரை 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதும் கடுமையான விமர்சனங்களைச் […]
