மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில் உலகிலேயே மிக விலை உயர்ந்த போதை பொருளான ஹொக்கைன் வகை போதை பொருளை வைத்திருந்த நபர் ஒருவரும் அவரிடம் இருந்து 1 கிலோ 12 கிராம் கொக்கைன் வகை போதை பொருளும் திங்கட்கிழமை(18) மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம்,
மன்னார் மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் L.Y.A.S சந்திரபால வின் பணிபுறைக்கு அமைவாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே ஆலோசணையின் பெயரில் உப பொலிஸ் பரிசோதகர் J.T.U ஜேவர்தன தலைமையிலான குழுவினரான குணசிங்க(75927) அசங்க(66638) பொலிஸ் கொன்ஸாபில்களான விமுர்த்தி (83790) திஸனாயக்க(90465) சுகிர்தரன்(25227) கருணா சிங்க(37662)அபக கோன்(35399) பிரேம ரெட்ன(37882) ஆகிய 9 பேர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்தப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட நபர் தாழ்வுபாடு பகுதியை சேர்ந்த 34 வயதான நபர் என்பதுடன் சந்தேக நபரிடம் மன்னார் குற்றபுலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சன்றுபொருள் மற்றும் சந்தேக நபரை ஆஜர்படுத்தவுள்ளனர்.
மேற்படி கைப்பறப்பட்ட கெக்கைனின் தற்போதைய சந்தை மதிப்பு 30 மில்லியனுக்கும் (3 கோடி) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது