சென்னையில் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வையுங்கள்! ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில்,  சென்னையில் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், புதிதாக சாலையை தொண்ட தடை விதிக்க அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னையில், சாலைகளை தோண்டும் பணிக்கு தடை விதித்துள்ள சென்னை மாநகராட்சி,  மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சாலை தோண்டுவதை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. முன்னதாக பெருநகர சென்னை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.