விராட் கோலி, பும்ரா இல்லை – உலக கோப்பையில் இந்தியாவின் துருப்புச்சீட்டு இவர் தான்: அகர்கர்

அஜித் அகர்கர் கணிப்பு

இறுதிப் போட்டியில் இலங்கையைத் தோற்கடித்து ஆசியக் கோப்பையை வென்ற பிறகு, இந்தியா ஆஸ்திரேலியாவை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் எதிர்கொள்ள உள்ளது. இது 2023 ODI உலகக் கோப்பைக்கான சரியான தயாரிப்பாக இருக்கும். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கே.எல்.ராகுல் தலைமையில் இந்த தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. அப்போது பேசிய இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், வரும் உலக கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தான் இருப்பார் என தெரிவித்துள்ளார். 

குல்தீப் யாதவ் சிறப்பான பந்துவீச்சு

குல்தீப் யாதவ் ஆசியக் கோப்பை 2023-ல் சிறப்பாக செயல்பட்டு சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். இந்த தொடரில் மட்டும் மொத்தம் 9 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளும், சூப்பர் ஃபோர் சுற்றில் இலங்கைக்கு எதிராக ஒரு நான்கு விக்கெட்டுகளும் எடுத்தார். அவரது சிறப்பான பந்துவீச்சிற்காக அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இது குறித்து பேசிய இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், வரும் உலக கோப்பையில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக குல்தீப் தான் இருப்பார் என கூறியுள்ளார். அஜித் அகர்கர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பயிற்சியாளர் குழுவில் இருந்தார். அப்போது அவருடன் குல்தீப் யாதவ் பணியாற்றியுள்ளார். 

அஜித் அகர்கரின் நம்பிக்கை

“ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸில் இருக்கும்போது அவருடன் நேரத்தை செலவிட்டுள்ளேன். அவர் ஒரு சிறப்பு திறன் கொண்டவர். ஒவ்வொரு வீரருக்கும் நம்பிக்கை காட்டப்பட வேண்டும். இந்திய அணி நிர்வாகம் அதைச் செய்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்கு அவர் ஒரு துருப்புச் சீட்டு. பெரும்பாலான அணிகள் அவரை சவாலாகக் கருதுகின்றன ” என்று அகர்கர் கூறினார். இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படவில்லை. அவருடன் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.