விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில், ராஜீ என்பவர் காலி வீட்டுமனை ஒன்றை இரண்டு மாதங்களுக்கு முன்பாக வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், அந்த வீட்டுமனைக்கு பட்டா மாறுதல் செய்ய விண்ணப்பித்திருந்துள்ளார். இதனையடுத்து, வீட்டுமனையை அளந்து பட்டா மாறுதல் செய்ய 5,000 ரூபாயை லஞ்சமாக வழங்க வேண்டுமென சர்வேயர் வெங்கடாச்சலம் கேட்டிருக்கிறார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜீ, இது தொடர்பாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகாரளித்துள்ளார். அந்த புகாரை ஏற்ற லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சத்யராஜ் தலைமையிலான அதிகாரிகள், ரசாயனம் தடவிய 5,000 ரூபாய் நோட்டுக்களை நேற்று ராஜீயிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். அதன்படி, விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த சர்வேயர் வெங்கடாச்சலத்திடம், ராஜீ ரூபாய் நோட்டுக்களை கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், சர்வேயரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பட்டா மாறுதல் செய்ய 5000 ரூபாய் லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம், விக்கிரவாண்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY