உலகக் கோப்பையில் இந்த 3 வீரர்கள் ஒன்றாக விளையாடவே மாட்டார்கள்… இந்தியாவுக்கு பின்னடைவா?

Indian Cricket Team: இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு கிரிக்கெட் உலகமே காத்திருக்கிறது. வரும் அக். 5ஆம் தேதி உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், வரும் செப். 29ஆம் தேதி முதல் பயிற்சி ஆட்டங்கள் தொடங்க உள்ளன. பயிற்சி ஆட்டங்களில் இந்தியா இங்கிலாந்து அணியை செப். 30ஆம் தேதியும், நெதர்லாந்து அணியை அக். 3ஆம் தேதியும் சந்திக்கிறது.

நெருங்குகிறது திருவிழா

மேலும், இந்திய அணி உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்திற்கு முன்னால் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நாளையும் (செப். 24), ராஜ்கோட்டில் வரும் செப்.27ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

ஆசிய கோப்பையை வென்று, உலகக் கோப்பை வெல்லக்கூடிய பந்தயத்தில் தானும் இருக்கிறேன் என இந்திய அணி நிரூபித்திருந்தது. ஆஸ்திரேலியா உடனான இந்த தொடர் என்பது ஒட்டுமொத்த அணிக்கும் மற்றுமொரு சோதனையாக அமைந்துள்ளது. இந்திய அணி அதனையும் வெற்றியுடன் நிறைவு செய்வார்கள் என ரசிகர்களும், வல்லுநர்களும் கருதுகின்றனர்.

இந்திய அணி மீதான கேள்விகள்

உலகக் கோப்பைக்கான வீரர்கள் இம்மாத தொடக்கத்தில் பிசிசிஐ அறிவித்த நிலையில், பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் கூடவே வந்தன. காயத்தில் இருந்து முழுமையாக மீளாத ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பளித்தது ஏன்; சூர்யகுமார் ஒருநாள் போட்டிகளில் திணறும் வேளையில் அவருக்கு ஏன் இத்தகைய முக்கியத்துவம்; சஞ்சு சாம்சன், சஹால், அஸ்வின் ஆகியோருக்கு ஏன் வாய்ப்பளிக்கப்படவில்லை என கேள்விகளை பலரும் அடுக்கினர்.

அந்த 8ஆவது வீரர்

இருப்பினும், இவை அனைத்திற்கும் ஆசிய கோப்பை தொடரும், நேற்றைய போட்டியுமே பதில் அளித்துவிட்டன எனலாம். ஆனால், இன்னும் பதில் கிடைக்காத மற்றொரு கேள்வி ஏன் பும்ரா – ஷமி – சிராஜ் என மூன்று பிரீமியம் வேகப்பந்துவீச்சாளர்களை ஒன்றாக பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை என்பது தான். எட்டாவது இடத்தில் நல்ல பேட்டிங் செய்யக்கூடியவர் தேவை என்பதன் பொருட்டு வேகபந்துவீச்சு ஆல்-ரவுண்டராக ஷர்துல் தாக்கூரையும், சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக அக்சர் படேலையும் இந்திய அணி தேர்வு செய்துள்ளது.

சுழலுக்கு சாதகம் இல்லாத இடங்களில் ஷர்துல் தாக்கூர் வருவதற்கு பதில் ஷமியே இடம்பெறலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஷர்துல் தாக்கூர் அவ்வப்போது விக்கெட் எடுப்பவராக இருந்தாலும், அவர் அதிக எகானாமி கொண்ட பௌலராக உள்ளார், மேலும் பேட்டிங்கில் அவ்வப்போது தான் செயல்படுகிறார். அவர் கடந்த சில ஆண்டுகளாக பல விக்கெட்டுகளை இந்திய அணி சார்பில் வீழ்த்தியிருந்தாலும் ஷமியின் அனுபவமும், ஆற்றலும் இந்தியாவுக்கு தேவை என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. 

இந்தியாவுக்கு என்ன தேவை?

அந்த வகையில், இந்த பிரச்னை குறித்து மூத்த இந்திய வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா அவரது யூ-ட்யூப் தளத்தில் பேசியிருந்தார். அதில், “முகமது ஷமி, தார் ரோடு போன்ற தட்டையான ஆடுகளத்தில் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்த பந்து ஆட்டத்தின் (நேற்று) சிறந்த பந்தாகும். அது ஒரு நல்ல பந்து. zeenews.india.com/tamil/photo-gallery/mohammed-shami-gets-bail-in-domestic-violence-case-continues-to-excel-on-the-cricket-field-465002

இந்தியாவுக்கு என்ன தேவை, எட்டாவது இடத்தில் இறங்கும் பேட்ஸ்மேனிடம் இருந்து ரன்களா அல்லது ஷமியின் விக்கெட்டுகளா என்பது தான். இது தெரிந்துவிட்டாலே விவாதம் முடிந்துவிட்டது. ஆனால் இந்திய அணி ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை ஒன்றாக பிளேயிங் லெவனில் வைக்காது என்று நான் இன்னும் நினைக்கிறேன். 

அவர்கள் இன்னும் 8ஆவது இடத்தில் நல்ல ரன்கள் வேண்டும் என்பதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் இந்த மூன்று பந்துவீச்சாளர்களுடன் செல்லமாட்டார் என்று நினைக்கிறேன். மூன்றாவது பந்துவீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இருப்பார், மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக அக்ஷர் அல்லது அஷ்வின் இருக்கலாம். ஆனால், ஷமி சிறந்த திறனுடையவர் என்பதில் ஐயமில்லை” என பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.