கையில் வாள், மொட்டை தலை… புது லுக்கில் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம்!

Yashasvi Jaishwal New Look: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரராக கலக்கி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சமீபத்தில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சர்வதேச அளவில் அறிமுகமானார். இந்திய அணியில் ஷிகர் தவாணுக்கு அடுத்து இடதுகை ஓப்பனராக இஷான் கிஷனுடன் ஜெய்ஸ்வாலும் தற்போது இணைந்திருக்கிறார்.

சமீபத்தில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் இந்திய சமன் செய்தது. அந்த தொடரில் ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் இந்திய அணிக்கு ரோகித் – தவாண் போல் தானும் கில்லும் சிறப்பான பங்களிப்பை செய்ய வேண்டும் என கூறியிருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில்,”அவர்கள் (ரோஹித் மற்றும் ஷிகர்) செய்தது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது. அவர்கள் கிரிக்கெட்டில் நம்ப முடியாதவற்றை செய்தவர்கள். நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய முயற்சி செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். 

சீனியர்களுடன் பேசுகிறேன்

நான் என் சீனியர்களிடம் சென்று பேசுகிறேன். ரோஹித், விராட், ஹர்திக் பாண்டியா, சூர்யாகுமார் மற்றும் ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான சீனியர்கள் எங்களிடம் உள்ளனர். அவர்கள் பேசும் விதம், அவர்களின் அனுபவங்களை கண்டிப்பாக கேட்கிறேன். அவர்களின் பேச்சுக்களில் இருந்து முடிந்தவரை தகவல்களைச் சேகரித்து, அதை என் விளையாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறேன். ‘நான் நம்புகிறேன், நான் நம்புகிறேன், நான் அதைச் செய்வேன்’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அதை அடைய நான் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

ஜெய்ஸ்வாலின் நம்பிக்கை

நன்றாக சாப்பிட வேண்டும், நன்றாக தூங்க வேண்டும், கடினமாக பயிற்சி செய்ய வேண்டும், இது எல்லாம் உங்களை நம்பும் வழிகளில் ஒன்று என நினைக்கிறேன். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், உங்கள் செயல்பாட்டில் ஒட்டிக்கொண்டு தொடர்ந்து போராட வேண்டும். நம்பிக்கை இருக்கும். என்னால் இதைச் செய்ய முடியும் என்று நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள், உங்கள் திறன்களை நம்புங்கள். கடினமாக உழைப்பது முக்கியம், அழுத்தம் வரும்போது அது உங்களுக்கு உதவும்” என்றார்.

Yashasvi Jaiswal in new looks. pic.twitter.com/hPdz2dtIcW

— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 23, 2023

இந்நிலையில், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக அறியப்படும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது புதிய தோற்றத்தில் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார் எனலாம். ‘சிவாஜி’ பட ரஜினி போல் மொட்டை தலையுடன் கையில் வாளுடன் இருக்கும் அவரின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், இந்திய அணியின் எதிர்காலம் என்றும் அவரை புகழ்ந்து வருகின்றனர். 

இந்தியா முன்னிலை

இந்திய அணி தற்போது உலகக் கோப்பை தொடருக்கு ஆஸ்திரேலியா அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் விராட், ரோஹித், ஹர்திக், குல்தீப் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. மொஹாலியில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை பெற்றது. இந்தூரில் நாளை நடைபெறும் இரண்டாவது வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.