Apple Iphone 15 Series: உலகின் மிகப் பாதுக்காப்பான மற்றும் உங்கள் தனியுரிமைக்கு (Privacy) அதிக முக்கியத்துவம் தரும் நிறுவனமாக ஆப்பிள் விளங்குகிறது. அதன் கடுமையான பாதுகாப்பிற்காகவே அதன் விலையையும் மற்றவைகளை விட அதிகம் விற்கப்படுகிறது.
ஐபோன் 15இல் புதிய முயற்சி
ஆப்பிள் ஐபோன் பாதுகாப்பானது தான் என்றாலும், ஐபோன் போன்று பல போலிகள் தயாரிக்கப்பட்டு அதன் பெயரில் வெளிச்சந்தையில் விற்பனையாகின்றன. இதனை தடுக்கும் வகையில் அந்நிறுவனம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், அதன் சமீபத்திய வெளியீடான ஐபோன் 15 சீரிஸிலும் அவை இடம்பெற்றுள்ளன.
போலியான ஐபோன் 15 விற்பனையை ஆப்பிள் நிறுவனம் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் கடினமாக்குகிறது. புதிய ஐபோன் 15 மாடலின் மொபைல் பாக்ஸ்கள் போன்றவை சாதனத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்கும் புதிய பாதுகாப்பு பொறிமுறையுடன் வருகின்றன. இது ஒரு புதிய புற ஊதா ஒளி அடிப்படையிலான தொழில்நுட்பமாகும்.
பாதுகாப்பு
இது வாடிக்கையாளர் அவர்கள் வாங்கும் ஐபோன் 15 சீரிஸ் சாதனங்கள் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைச் சரிபார்க்க உதவும். ஐபோன் உட்பட ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு சாதனங்களில் ஏராளமான மோசடிகள் இருப்பதால் இது அவசியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும். ஆனால் ஆப்பிள் இந்த புதிய பாதுகாப்பு பொறிமுறையைப் பற்றி எதையும் குறிப்பிட விரும்பவில்லை, இதன்மூலம் அது தொடர்புடைய மோசடிகளைத் தடுக்கலாம் என கூறப்படுகிறது.
மறைமுக லேபிள்கள்
ஒரு தனி ஐபோன் 15 மொபைலின் பாக்ஸில் புதிய புறஊதா லேபிள்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் X தளத்தின் பயனர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அந்த மொபைல் பாக்ஸில் ஹாலோகிராம்கள் உள்ளன, அவை புற ஊதா ஒளிகள் காட்டப்படும் போது மட்டும் நம் கண்களுக்கு புலப்படும்.
அதாவது, புதிய ஐபோன் 15 சீரிஸின் சாதனங்களை வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நம்பகத்தன்மையை வழங்குவதற்காக QR குறியீடுகள் போன்ற தற்போதைய பாதுகாப்பு வழிமுறைகளுடன் கூடுதலாக இந்த ஹாலோகிராம்கள் அச்சிடப்படுகின்றன. இது ஒரு சிறிய விவரம் என்பதால் நீங்கள் இதை கண்டுகொள்ளாமல் செல்ல அதிக வாய்ப்புள்ளது, ஆனால் நீங்கள் அது போலியா, உண்மையா என சந்தேகம் வருகிறதோ இல்லையோ நீங்கள் வாங்கும் ஐபோன் சீரிஸ் யூனிட் உண்மையானது என்பதை உறுதிசெய்ய இந்த UV லைட்டை உங்களுடன் எடுத்துச் செல்லுவது பயனளிக்கலாம்.
மோசடி நடக்க வாய்ப்பு…
புதிய பொறிமுறையைப் பற்றி எதுவும் குறிப்பிடாததன் மூலம், ஐபோன் 15 போன்றே சாத்தியமான மோசடிகளை ஆப்பிள் தடுத்திருக்கலாம். மேலும், போலி விற்பனையாளர்கள் அதே UV ஒளி அடிப்படையிலான பொறிமுறையை ஐபோன் 15 சீரிஸ் பாக்ஸ்களில் பிரதியெடுப்பது சற்று கடினமாகத் தெரிகிறது. சில விற்பனையாளர்கள், எடுத்துக்காட்டாக, புதிய சில்லறை பெட்டிகளில் பயன்படுத்திய அல்லது புதுப்பிக்கப்பட்ட ஐபோன் சாதனங்களை பேக் செய்கிறார்கள், அவை போலியானவை ஆனால் அசல் சாதனங்களைப் போலவே இருக்கும். இந்த ஐபோன் யூனிட்கள், புதிய விலையில் விற்க எளிதானது.
போலியை கண்டுபிடிக்க சில வழிகள்
புதிய ஹாலோகிராம்களைத் தவிர, நீங்கள் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து உண்மையான தயாரிப்பை வாங்குகிறீர்களா என்பதைச் சரிபார்க்க வேறு வழிகள் உள்ளன. நீங்கள் வாங்கும் ஐபோன் உண்மையானதா மற்றும் போலியானதா என்பதைச் சரிபார்க்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் சில:
— ஏதேனும் எழுத்துப் பிழைகள், ஆப்பிள் எழுத்துரு மற்றும் நிறத்தில் மாற்றம் மற்றும் தவறாக அச்சிடப்பட்ட விவரங்கள் ஆகியவற்றிற்காக மொபைல் பாக்ஸை கவனமாக சரிபார்க்கவும்.
— கடை அல்லது கடை உரிமையாளரிடம் குறைந்தது இன்னும் இரண்டு மொபைல் பாக்ஸை காட்டும்படியும், அவற்றை ஒன்றுக்கொன்று ஒப்பிட்டுப் பார்த்தும் ஏதேனும் வேறுபாடுகளைக் கண்டறியவும்.
— முடிந்தால், IME மற்றும் Series Number ஆகியவற்றை மொபைல் பாக்ஸில் அச்சிடப்பட்டுள்ளவற்றுடன் பொருத்த சாதனத்தை வாங்கிய பிறகு, ஐபோன் 15 சாதனத்தின் விற்பனையாளருக்கு முன்னால் அன்பாக்ஸ் செய்யவும்.